ஐரோப்பாவில் இனி விமானிகளுக்கு உளவியல் மதிப்பீடு சோதனை கட்டாயம்

ஐரோப்பாவில் உள்ள வணிக ரீதியான விமானிகளை ஓட்டும் விமானிகள் விமான நிறுவனத்துடன் இணைந்து பறப்பதற்குமுன் கட்டாயமாக தங்களுடைய உளவியல் மதிப்பீடு சோதனையை செய்திருக்க வேண்டும் என்று இஏஎஸ்ஏ எனப்படும் ஐரோப்பிய விமான போக்குவரத்து பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

கடந்த ஆண்டு, ஜெர்மன்விங்ஸ் விமானி ஒருவர் வேண்டுமென்றே விமானத்தை தரையில் மோதி பேரழிவை ஏற்படுத்தினார். இந்த சம்பவத்தில் 150 பேர் கொல்லப்பட்டனர். அதனைத்தொடர்ந்தே, ஐரோப்பிய விமான போக்குவரத்து பாதுகாப்பு நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

பெரும்பாலான விமானிகள் உளவியல் மதிப்பீடு சோதனையை மேற்கொள்கின்றனர்.

ஆனால், தற்போது ஐரோப்பிய விமான போக்குவரத்து பாதுகாப்பு நிறுவனத்தின் புதிய பரிந்துரைகளின்படி, இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

விமானி மற்றும் விமான ஊழியர்களுக்கு முறையான மருந்து மற்றும் மது சோதனைகளை நடத்த ஐரோப்பிய விமான போக்குவரத்து பாதுகாப்பு நிறுவனம் புதிய விதிகளை பரிந்துரைத்துள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்