சிரியாவில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் நுழையும் ஆண்கள் காணாமல் போவதாக ஐ.நா தகவல்

சிரியாவில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு அலெப்போ பகுதியில் நுழைந்த நூற்றுக்கணக்கான ஆண்கள் காணாமல் போயிருப்பது குறித்த தகவல்களை பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சிரியாவில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் நுழையும் ஆண்கள் காணாமல் போவதாக ஐ.நா தகவல்

சிரியாவில் தன்னிச்சையாக தடுப்பு காவலில் வைக்கும் நடைமுறை மோசமாக இருப்பதாக கூறியுள்ள அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவர், இந்த விஷயத்தில் கவலைப்படுவதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன என்று கூறியுள்ளார்.

எதிர்தரப்பு போராளிகள் பொதுமக்கள் தப்பியோடுவதை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக சில செய்திகள் கிடைத்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

அலெப்போவில் போராளிகள் இருக்கும் வரை அங்கு குண்டு தாக்குதல் தொடர்ந்து நடக்கும் என்று ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் கருத்து தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்