ஊக்கமருந்து மோசடி: 1000க்கும் மேற்பட்ட உயர்சாதனை ரஷ்ய வீரர்கள் ஏமாற்றி வந்ததாக குற்றச்சாட்டு

ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயர்சாதனை செய்த ரஷ்யத் தடகள வீரர்கள் பல ஆண்டுகளாக திட்டமிடப்பட்ட வகையில் ஊக்க மருந்து உட்கொள்வது மற்றும் அதனை மூடிமறைக்கும் திட்டங்களில் ஈடுபட்டனர் என்றும், இந்தச் செயல் பல ஆண்டுகளாக சர்வதேச விளையாட்டு போட்டிகளை ஏமாற்றி வந்ததாக ரஷ்யா தடகள மோசடிகளை விசாரித்து வரும் தலைமை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை FABRICE COFFRINI

2012 ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற ரஷ்ய அணி ஒலிம்பிக்ஸ் விளையாட்டை முன்னெப்போதும் இல்லாத அளவில் சீரழித்துவிட்டதாக உலக ஊக்க மருந்து தடுப்பு நிறுவனத்தால் பணியமர்த்தப்பட்ட, ரிச்சர்ட் மெக்லாரன் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

பரிந்துரைக்கப்பட்ட ஊக்க மருந்துக் கலவைகளை உட்கொண்ட ரஷ்யத் தடகள வீரர்களை யாரும் கண்டுபிடிக்க முடியாதபடி ரஷ்ய அரசாங்க நிறுவனங்கள் ஒரு நிறுவனமயக்காப்பட்ட ஒரு திட்டத்தை உருவாக்கியதற்கு மறுக்க முடியாத தடயவியல் ஆதாரங்கள் காட்டுகின்றன என்று அவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா ஒலிம்பிக் குழுவின் துணைத்தலைவர் இந்த அறிக்கையை அதே பழைய குற்றச்சாட்டுக்கள் தான் என கூறியுள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்