அலெப்போவில் ஏற்பட்டுள்ள அவலநிலையை குறைக்க ஐரோப்பாவில் அவசர பேச்சுவார்த்தை

அலெப்போவில் சிரிய அரசாங்கம் நடத்திவரும் கடுமையான தாக்குதலில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தப்பியோடி வரும் நிலையில், இந்த அவலநிலையை குறைப்பது எப்படி என்பது குறித்து ஐரோப்பாவில் தூதர்களும், ராணுவ வல்லுநர்களும் அவசர பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அலெப்போவில் ஏற்பட்டுள்ள அவலநிலையை குறைக்க ஐரோப்பாவில் அவசர பேச்சுவார்த்தை

ஐரோப்பிய மற்றும் அரபு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் சிரியா எதிர்தரப்பு அணியினரை சந்திப்பதற்கு முன்னதாக பாரிஸில் கூட்டம் ஒன்றில் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜான் கெர்ரி, அலெப்போ முற்றிலுமாக அழிக்கப்படுவதிலிருந்து காப்பாற்ற தான் பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார்.

கிழக்கு அலெப்போவை விட்டு போராளிகள் வெளியேற ஒரு திட்டத்தை வகுக்க ஜெனிவாவில், ரஷ்யா மற்றும் அமெரிக்க ராணுவ வல்லுநர்கள் மற்றும் தூதர்கள் முயற்சித்து வருகிறார்கள்.

தொடர்புடைய தலைப்புகள்