தோல்வியை ஏற்காமல் புதிய அதிபர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அடம்பிடிக்கும் காம்பியா அதிபர்

காம்பியாவில் இந்த மாத தொடக்கத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலின் முடிவுகளை அந்நாட்டு அதிபர் யாக்யா ஜமே நிராகரித்துள்ளார். ஒரு வாரத்திற்குமுன், அவர் தோல்வியை ஒப்பு கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

படத்தின் காப்புரிமை REUTERS/AFP
Image caption அடாமா பாரோ மற்றும் யாக்யா ஜமே

வாக்குப்பதிவில் சில குறைபாடுகளை சுட்டுக்காட்டி புதிய தேர்தலுக்கு ஜமே அழைப்பு விடுத்துள்ளார்.

1994 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியை தொடர்ந்து ஆட்சிக்கு வந்த ஜமேவை, அடாமா பாரோ 43 % வாக்குகளை பெற்று தேர்தலில் தோற்கடித்தார்.

தேர்தல் முடிவை ஏற்றுக் கொள்ள மறுப்பது ஜனநாயகத்திற்கு சேதத்தை ஏற்படுத்துவதாகும் என்று ஜமே மீது அடாமா குற்றஞ்சாட்டியுள்ளார்.

அதிபராக தேர்தெடுக்கப்பட்டுள்ள அடாமா தற்போது பத்திரமாக இருப்பதாக அவருடைய அரசு மாற்றத்திற்கான குழு தெரிவித்துள்ளது.