சிரியாவின் அலெப்போவை முழுமையாக கைப்பற்ற அரசின் விசுவாச படையினர் தீவிர தாக்குதல்

அலெப்போவை முழுமையாக கைப்பற்ற சிரியா அரசாங்கத்திற்கு விசுவாசமாக உள்ள படைகள் இறுதியாக ஒரு கடுமையான தாக்குதலை தொடுத்து வரும் நிலையில், இன்று மட்டும் சுமார் 1,200 போராளிகள் தங்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைந்துள்ளதாக ரஷ்யப் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சிரியாவின் அலெப்போவை முழுமையாக கைப்பற்ற அரசின் விசுவாச படையினர் தீவிர தாக்குதல்

கிழக்கு அலெப்போவில் போராளிகளின் பகுதிகளிலிருந்து சுமார் 20 ஆயிரம் பொதுமக்கள் வெளியேற்றத்தை ரஷ்யா படைகள் மேற்பார்வையிட்டதாக கூறியுள்ளது.

கடந்த இரு தினங்களில் மட்டும் சுமார் 50 ஆயிரம் பேர் வெளியேறியுள்ளனர்.

ஆனால், இந்த எண்ணிக்கைகளை உறுதிப்படுத்துவது இயலாத காரியம்.

பல போராளிகள் இஸ்லாமியவாத தீவிரவாதிகளால் கொல்லப்படலாம் என அஞ்சி சரணடைய முடியாமல் தவிப்பதாகவும், அதனால் அரசாங்க படைகள் முன்னேறி வரும்போது தங்கள் ஆயுதங்களை கீழே போட்டு சரணடைவதாகவும் சிரியா அரசு தொலைக்காட்சியில் பணி செய்யும் ஒரு செய்தியாளர் பிபிசியிடம் தெரிவித்தார்.

தொடர்புடைய தலைப்புகள்