ஏமனில் தற்கொலை குண்டுதாரி ஒருவர் நடத்திய தாக்குதலில் 20 படையினர் பலி

ஏமனில் உள்ள தெற்கு துறைமுக நகரமான ஏடனில் உள்ள ராணுவ தளத்தில் நிகழ்ந்த ஒரு தற்கொலை குண்டு தாக்குதலில் குறைந்து 20 படையினர் கொல்லப்பட்டிருப்பதாகவும், மேலும் 20 பேர் காயம் அடைந்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

படையினர் தங்களது சம்பளத்தை பெற நின்று கொண்டிருந்த போது தாக்குதல்தாரி தன்னைத்தானே வெடிக்க வைக்க செய்துள்ளார்.

சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கக் கட்டுப்பாட்டில் உள்ள ஏடனில், அங்குள்ள படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு தொடர்ந்து ஐ.எஸ் பொறுப்பேற்று வந்தது.

தொடர்புடைய தலைப்புகள்