டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளுக்கான மைதானத்தின் கட்டுமானம் தொடங்கியது

ஜப்பானின் டோக்கியோ நகரில் 2020 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான புதிய தேசிய மைதானத்தின் கட்டுமானத்தை ஜப்பான் தொடங்கியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய பிரதமர்

1964 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்காக பயன்படுத்தப்பட்ட மைதானத்தை இடித்து புதிய மைதானத்தை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்து கொண்ட பிரமுகர்களில் ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபேவும் ஒருவர் ஆவார்.

போட்டிக்கான செலவுகள் அதிகரிப்பதால், கட்டடத்தின் மறு சீரமைப்பு அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டது.

மரக்கட்டை மற்றும் முன் முனையப்பட்ட பேனல்களை கொண்டு அமையவிருக்கும் அந்த புதிய மைதானத்தின் கட்டுமான செலவு 1.5 பில்லியன் டாலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.