வட கொரியா நிலக்கரியை இறக்குமதி செய்ய சீனா தாற்காலிக தடை

வடகொரியா மீது ஐ.நா பிறப்பித்துள்ள புதிய தடைகளுக்கு இணங்க வட கொரியாவிலிருந்து நிலக்கரியை இறக்குமதி செய்ய சீனா தாற்காலிகமாக தடை விதித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption வட கொரியா நிலக்கரியை இறக்குமதி செய்ய சீனா தாற்காலிக தடை

இந்த ஆண்டு இறுதிவரை தடை உத்தரவு நீடித்திருக்கும்.

கடந்த செப்டம்பர் மாதம் வட கொரியா ஐந்தாவது அணு குண்டு சோதனை நடத்தியதை தொடர்ந்து இந்த தடை உத்தரவு கடந்த மாதம் ஒப்புக் கொள்ளப்பட்டிருந்தது.

வடகொரியாவில் வெளிநாட்டு நாணய வருமானத்தை ஈட்டித்தரும் மிகப்பெரிய வர்த்தகமாக நிலக்கரி பார்க்கப்படும் நிலையில், இந்த தடை உத்தரவு நிலக்கரி ஏற்றுமதியை கட்டுப்படுத்த உள்ளது.

மேலும், பிற மூலப் பொருட்களின் ஏற்றுமதியை முழுவதுமாக தடை விதிக்கிறது.

வட கொரியாவின் நிலக்கரியை இறக்குமதி செய்யும் ஒரே நாடு சீனா என்று கருதப்படுகிறது.

தொடர்புடைய தலைப்புகள்