அண்டார்டிகாவில் உருகி வரும் பனிப்பாறைகள் : பிரிட்டன் பல்கலைக்கழக அராய்ச்சி குழுவினர் ஆய்வு

மேற்கு அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறைகள் எவ்வாறு உருகி வருகின்றன என்பதை விளக்கி காட்ட, ஒரு கால் நூற்றாண்டுக்கு முந்தைய செயற்கைக்கோள் சான்றுகளை ஒரு பிரிட்டிஷ் அராய்ச்சி குழுவினர் பயன்படுத்தி உள்ளனர்.

படத்தின் காப்புரிமை NASA
Image caption அண்டார்டிகாவில் உருகி வரும் பனிப்பாறைகள்

லீட்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த அந்த குழு, வரலாற்று செயற்கைக்கோள் தகவல்களை பயன்படுத்தி, எங்கே மற்றும் எப்போது பனிப்பாறைகள் சுருங்க தொடங்கின என்பதையும், அது எப்படி உள்நாட்டில் ஊடுருவியுள்ளது என்பதையும் கண்டறிந்துள்ளது.

இனி வரக்கூடிய நூற்றாண்டுகளில் பனிப்பாறைகள் எவ்வளவு பனியை இழக்கும் என்பதை கண்டறியும் திட்டங்களுக்கு இந்த ஆய்வு உதவியாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த மகத்தான கட்டமைப்புகளானது தற்போது ஆண்டுதோறும் சுமார் 120 பில்லியன் டன்கள் பனியை இழந்து வருகிறது. அதில் சில பனிப்பாறைகள் பிரிட்டனின் அளவுக்கு இருந்தது என்று குறிப்பிடத்தக்கது.

ஆண்டுத்தோறும் உலகாளவிய அளவில் அதிகரித்து வரும் கடல் மட்ட அளவுகளில் 10 சதவிகிதத்துக்கும் அதிகமாக இந்த இழப்பு ஒரு காரணமாக அமைந்து வருகிறது.

தொடர்புடைய தலைப்புகள்