தேர்தலில் தோற்ற அதிபரை சமரசம் செய்ய மேற்கு ஆஃப்ரிக்க தலைவர்கள் காம்பியா பயணம்

காம்பியா அதிபர் தேர்தலில் தோல்வியை தழுவிய அதிபர் யாக்யா ஜமே தனது அதிகாரத்தை சுமூகமாக விட்டு கொடுக்க வேண்டி அவரை இணங்கவைக்க வரும் செவ்வாய்கிழமையன்று பல மேற்கு ஆஃப்ரிக்க தலைவர்கள் காம்பியாவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அதிபர் தேர்தலில் தோல்வியை தழுவிய அதிபர் யாக்யா ஜமே

லைபீரிய அதிபர் எல்லென் ஜான்சன் சர்லீஃப் இந்த பிரதிநிதிகள் குழுவை தலைமைத்தாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் தற்போது எகோவாஸ் எனப்படும் பிராந்திய குழுவின் தலைவராக உள்ளார். அந்த குழுவில் நைஜீரியா அதிபர் முகமது புஹாரியும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

யாக்யா ஜமே முதலில் வரும் ஜனவரி மாதம் பதவி விலகுவதாக தெரிவித்திருந்தார். ஆனால், கடந்த வெள்ளிக்கிழமையன்று தேர்தல் முடிவுகளை நிராகரிப்பதாக அறிவித்தார்.