பஹ்ரைனின் எதிர்க்கட்சி ஷியா தலைவருக்கு வழங்கப்பட்ட 9 ஆண்டு சிறை தண்டனை உறுதி

பஹ்ரைனின் முக்கிய ஷியா எதிர்க்கட்சியின் தலைவர் அலி சால்மானுக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டிருந்ததை அந்நாட்டு நீதிமன்றம் ஒன்று நடத்திய மறுவிசாரணையில் உறுதி செய்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை EPA
Image caption வெறுப்புணர்வை தூண்டியதாகவும், அரசை ஆயுத பலத்தால் அகற்ற அழைப்பு விடுத்ததாகவும் ஷேக் சாலமானுக்கு தண்டனை

வெறுப்புணர்வை தூண்டியதாகவும், அரசை ஆயுத பலத்தால் அகற்ற அழைப்பு விடுத்ததாகவும் ஷேக் சாலமான் தண்டனை பெற்றிருக்கிறார்.

இவர் ஓராண்டுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட பிறகு, இவருடைய வழக்கு பலமுறை மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

ஒரு விசாரைணையில் அவருடைய தண்டனையை இரண்டு மடங்காக்கி தீர்ப்பளிக்கப்பட்டது.

சுன்னி அரசு உறுதியளித்த சீர்திருத்தங்களை இன்னும் நிறைவேற்றவில்லை என்று கூறிவரும் சிறுபான்மையினரான ஷியா முஸ்லிம்களை ஒன்று திரட்டும் ஒரு விஷயமாக இருந்து சால்மானுக்கு அளிக்கப்பட்டுள்ள சிறை தண்டனை வருகிறது

தொடர்புடைய தலைப்புகள்