அலெப்போவின் கிழக்கு பகுதி முழுவதையும் கைப்பற்றும் நிலையில் அரசு படை

சுற்றிலும் முற்றுகையிடப்பட்டுள்ள சிரியாவின் அலெப்போ நகரில் மேலும் 6 சுற்றுப்புறப் பகுதிகளில் இருந்து கிளர்ச்சியாளர்கள் பின்வாங்கிவிட்டதாக தகவல்கள் வந்துள்ளன.

படத்தின் காப்புரிமை AFP

அந்த நகரத்தின் கிழக்கு பகுதி முழுவதையும் மீண்டும் கைப்பற்றும் நிலையில் சிரியா அரசு படை இருப்பதாக மனித உரிமைகளுக்காக சிரியா கண்காணிப்பகம் தெரிவித்திருக்கிறது.

மிகவும் சுருங்கி வரும் கிளர்ச்சியாளர்களின் கைப்பிடியில் உள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் சிக்கியுள்ளனர்.

அலெப்போ போர்நிறுத்தம் தொடர்பாக ரஷ்யா பொய் கூறுகிறது - பிரான்ஸ் குற்றச்சாட்டு

ஷெல் குண்டுகள் மழை மாதிரி பொழியப்படும் நிலையில், தன்னை சுற்றி வாழும் மக்கள் அனைவரும் பேரழிவு மிக்க "இறுதிநாள்" சூழ்நிலையில் இருப்பதாக ஆசிரியர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார்.

லட்சக்கணக்கான பொது மக்கள் அரசு கைப்பற்றிய இடங்களுக்கு தப்பியோடியுள்ளனர்.

ஆனால், அரசு அதிகாரிகளில் கைகளில் தங்களை கையளித்தால், கொல்லப்படலாம் என்று பிறர் அஞ்சுகின்றனர்.