அலெப்போ: தீ பிடித்த கட்டடத்தில் சிக்கியிருக்கும் குழந்தைகளை மீட்க ஐநா வேண்டுகோள்

கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருக்கும் பகுதியை அரசு படைகள் நெருங்கும் நிலையில், சிரியாவின் அலெப்போ நகரில் தீ பற்றி எரியும் ஒரு கட்டடத்தில் டஜன்கணக்கான குழந்தைகள் சிக்கியிருப்பதாக ஐநா தெரிவித்திருக்கிறது,

படத்தின் காப்புரிமை AFP

குடும்பங்களில் இருந்து எப்படியோ பிரிந்துவிட்ட இந்த குழந்தைகளை எப்படியாவது உடனடியாக அந்த கட்டடத்தில் இருந்து வெளியேற்றுவதற்கு குழந்தைகளுக்கான ஐநா நிறுவனமான யுனிசெப் அழைப்பு விடுத்துள்ளது.

சுருங்கி வருகின்ற கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருக்கும் ஆயிரக்கணக்கான மக்களோடு இந்த குழந்தைகளும் சிக்குண்டுள்ளனர்.

நிராயுதபாணியான பொது மக்கள், அரசு ஆதரவு ஆயுதப்படையினரால் படுகொலை செய்யப்பட்டதற்கான செய்திகள் தன்னிடம் இருப்பதாக ஐநா மனிதநேய நிறுவனத்தின் தலைவர் ஜன் இக்லாண்ட் தெரிவித்திருக்கிறார்.

சிரியா அரசும், அதனுடைய ரஷ்ய கூட்டாளியும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் இக்லாண்ட் கூறியிருக்கிறார்.