இஸ்லாத்தை அவமதிக்கவில்லை என்கிறார் ஜகார்த்தா மேயர்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இஸ்லாத்தை அவமதிக்கவில்லை என்கிறார் ஜகார்த்தா மேயர்

இந்தோனீசியத் தலைநகரான ஜகார்த்தாவின் மேயர், இஸ்லாத்தை அவமதிக்கும் எண்ணம் தமக்கு இல்லை எனக் கூறுகிறார்.

மதநிந்தனைக் குற்றச்சாட்டு தொடர்பில் நீதிமன்றம் வந்தபோதே அவர் இதைக் கூறினார்.

சீன வம்சாவளி கிறிஸ்தவரான அவர், அரசியல் கூட்டம் ஒன்றில் குரானை அவமதித்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

தன்மீது தவறில்லை என்று கண்ணீர்மல்க அவர் நீதிமன்றத்தில் வாதிட்டார்.

இந்த வழக்கு இந்தோனீசியாவின் ஜனநாயக உறுதிப்பாட்டை சோதிக்கும் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.