கிழக்கு அலெப்போவில் பொதுமக்கள் வெளியேற்றத்திற்கு போராளிகள் ஆதரவு

அலெப்போவில் போராளிகள் மற்றும் அரசு படைகள் இடையே முன்பிருந்த ஒப்பந்தம் முறிந்த நிலையில், கிழக்கு அலெப்போவில் போராளிகள் கட்டுப்பாட்டில் உள்ள கடைசி பகுதிகளில் பொதுமக்களை வெளியேற்றும் ஒரு ஒப்பந்தத்திற்கு போராளிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை KARAM AL-MASRI

புதன்கிழமை அதிகாலை அலெப்போ நகரில் உள்ள போராளிகள் மற்றும் பொதுமக்கள் வெளியேற திட்டமிட்டிருந்தனர். ஆனால், உடன்படிக்கை முறிந்தது.

வியாழக்கிழமை அதிகாலை வெளியேற்றம் நடைபெறும் என்று பின்னர் போராளி குழுக்கள் தெரிவித்திருந்தனர்.

படத்தின் காப்புரிமை KARAM AL-MASRI

ஆனால், இதுகுறித்து சிரியா அரசாங்கத்திடமிருந்தோ அல்லது அதன் பெரிய கூட்டாளியான ரஷ்யாவிடமிருந்தோ இதுவரை எந்த உறுதியான தகவல்களும் தெரிவிக்கவில்லை.

சிரியா அரசின் ஆதரவு பெற்ற லெபனானின் ஷியா முஸ்லிம் இயக்கமான ஹெஸ்பொல்லா நடத்தும் ஊடகம் ஒன்று, பேச்சுவார்த்தைகள் பெரிய சிக்கல்களை சந்தித்து வருவதாகவும், இதுவரை இன்னும் நிறைவு பெறவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்