அதிகப்படியான மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் விமானிகள்: ஆய்வில் தகவல்

பயணிகள் விமான சேவை நிறுவனங்களில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான விமானிகள் அதிகப்படியான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தின் மக்கள் சுகாதார ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

பெயர் குறிப்பிடப்படாத 1800க்கும் மேலான விமானிகளிடம் எடுக்கப்பட்ட ஆய்வில், அவர்களில் நான்கு சதவீதம் பேரின் மனங்களில் கடந்த இரண்டு வாரங்களுக்குள்ளாக தற்கொலை எண்ணம் இருந்ததாகத் தெரிகிறது.

ஜெர்மன் விங்ஸ் நிறுவனத்தின் ஒரு விமானி மன அழுத்தத்தால் வேண்டுமென்றே ஃபிரான்ஸ் நாட்டின் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் விமானத்தை இடித்து அதில் இருந்த 150 பயணிகளும் பலியாக நேர்ந்த சம்பவம் நேர்ந்த ஒன்றரை வருடத்திற்கு பிறகு இந்த ஆய்வு வந்துள்ளது.

சமூகத்தில் தங்களைப் பற்றிய களங்கம் ஏற்படும் என்ற எண்ணத்தாலும் , பணியை இழந்துவிடுவோம் என்ற அச்சத்தினாலும் விமானிகள் தங்கள் மன அழுத்தத்தை மறைக்கின்றனர் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.