ஐரோப்பாவின் கலிலியோ செய்கோள் வழிகாட்டி தொடங்கியது

ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரஜைகளுக்கு உலகிலே மிகத்துல்லியமான செயற்கைக்கோள் வழிகாட்டி தொழில்நுட்பத்தை வழங்கும் நோக்கில், ஒன்றியத்தின் கலிலியோ அமைப்புமுறை தன்னுடைய முதல் சேவைகளை வழங்கத் தொடங்கியுள்ளது.

படத்தின் காப்புரிமை @galileognss

தொடக்கத்தில், குறைந்த அளவிலான திறன்பேசிகள் மற்றும் கார் வழிகாட்டும் அமைப்புகளுக்கு மட்டுமே இந்த சேவை கிடைக்க உள்ளது.

கலிலியோ வலையமைப்பில் உள்ள செயற்கைக்கோள் அணு கடிகாரங்களைக் கொண்டிருப்பதால் ரஷ்யா அல்லது அமெரிக்க ராணுவ சேவைகளான ஜிஎல்ஓஎன்ஏஎஸ்எஸ் மற்றும் ஜிபிஎஸ் (GLONASS, GPS) காட்டிலும் மிகத்துல்லியமாக இது இடங்களை காட்டும் என நம்பப்படுகிறது.

தற்போது இந்தத்திட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில், கலிலியோவின் தகவல்களை பயன்படுத்தும் செயலிகளை இயங்கச் செய்யும் மைக்ரோசிப்களை விநியோகம் செய்ய தொழில்நுட்ப நிறுவனங்களுடன் ஐரோப்பிய ஆணைய அதிகாரிகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

2020 ஆம் ஆண்டில் முழு செயல்பாட்டில் வரும்போது, புவிசார் இடங்களை கண்டறியும் துல்லியத் தன்மை பத்து மடங்கு அதிகரிக்கும் என்று ஐரோப்பிய ஆணையத்தின் துணை தலைவர் மார்கோ செஃப்கோவிக் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை @galileognss

தொடர்புடைய தலைப்புகள்