போலந்து: கருத்து சுதந்திரத்திற்கு எதிரான அரசின் கட்டுப்பாடுகளுக்கு ஊடகங்கள் போராட்டம்

தங்களுடைய பணியில் அரசு விதிக்க திட்டமிட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஒருநாள் நாடாளுமன்ற நடவடிக்கைகளை செய்திகளாக்க போலந்தின் பக்கசார்பற்ற ஊடகங்கள் மறுப்புத் தெரிவித்திருக்கின்றன.

படத்தின் காப்புரிமை Getty Images

அடுத்த ஆண்டு முதல் குறைந்த எண்ணிக்கையிலான பத்திரிகையாளர்களே நாடாளுமன்ற கட்டடத்திற்குள் அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஒளிப்பதிவு செய்ய தெரிவு செய்யப்பட்ட 5 தொலைக்காட்சி நிறுவனங்களே அனுமதிக்கப்படும்.

இந்த நடவடிக்கைகள், கட்டுப்பாடானவை என்று நம்பவில்லை என்று அரசு கூறியுள்ளது.

கடந்த ஆண்டு அதிகாரத்திற்கு வந்த பிறகு, வலது சாரி சட்ட மற்றும் நீதி கட்சியானது, பத்திரிகை சுதந்திரத்தின் மீது கட்டுப்பாடுகளை விதிப்பதாகவும், நீதி துறையை குறைத்து மதிப்பிடுவதாகவும் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கிறது.

தொடர்புடைய தலைப்புகள்