இனி ஐ ஃபோன், ஐ பேட்களில் சூப்பர் மரியோ விளையாடலாம்

ஐ போன்கள் மற்றும் ஐ பேட்களில் இயங்கும் சூப்பர் மரியோ ரன் விளையாடுவதற்கான செயலியை, விளையாட்டு நிறுவனமான நின்டெண்டோ அறிமுகப்படுத்தியுள்ளது.

படத்தின் காப்புரிமை NINTENDO
Image caption இனி ஐ ஃபோன், ஐ பேட்களில் சூப்பர் மரியோ விளையாடலாம்

நின்டெண்டோ நிறுவனத்தின் மிகவும் பிரபல விளையாட்டு பாத்திரமான சூப்பர் மரியோவை ஸ்மார்ட்ஃபோன்களில் விளையாடுவதற்கான செயலி முதன்முறையாக அறிமுகமாகியுள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் போக்கிமான் கோ வெற்றிகரமாக வெளியிடப்பட்ட நிலையில், தற்போது சூப்பர் மரியோ ரன் வெளியிடப்பட்டுள்ளது.

போக்கிமான் நிறுவனத்தில் சிறுஅளவிலான பங்குகளை நின்டெண்டோ வைத்துள்ளது. ஆனால், அந்த விளையாட்டின் பெயர் மூன்றாம் தரப்பு நிறுவனம் ஒன்றினால் உருவாக்கப்பட்டது.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த புதிய சூப்பர் மரியோ ரன் விளையாட்டும் மக்கள் மத்தியில் பிரபலம் அடையும் என்று வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

ஆனால், இதை முறைகேடாகப் பதிவு செய்வதற்கு எதிரான அம்சம் தவறாக வழிநடத்துவது போல இருப்பதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தொடர்புடைய தலைப்புகள்