ரொஹிஞ்சா முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து ஆங் சாங் சூசி அரசை சாடிய ஐ.நா

மியான்மாரில் சிறுபான்மை ரொஹிஞ்சா முஸ்லிம் மக்கள் நடத்தப்படும் விதம் குறித்து ஆங் சாங் சூசி தலைமையிலான அந்நாட்டு அரசங்கத்தை ஐக்கிய நாடுகள் கடுமையாக விமர்சித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ரொஹிஞ்சா முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து ஆங் சாங் சூசி அரசை சாடிய ஐ.நா

பாலியல் வல்லுறவுகள், கொலைகள் மற்றும் பிற கொடுமைகள் தொடர்பாக தினந்தோறும் புகார்கள் வந்து கொண்டிருப்பதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஆங் சாங் சூசி

மியான்மார் அரசாங்கம் பின்பற்றும் அணுகுமுறைகள் எதிர்விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் இரக்கமற்றதாகவும் இருப்பதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையத் தலைவர் சயீத் ராத் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

மியான்மாரின் ரக்கீன் மாநிலத்தில் சுமார் 76 பேர் கொல்லப்பட்டனர். ராணுவ நடவடிக்கைகளுக்குப் பயந்து, சுமார் 27 ஆயிரம் ரொஹிஞ்சா முஸ்லிம்கள் வெளியேற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

தொடர்புடைய தலைப்புகள்