துருக்கி : தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 13 படையினர் பலி

துருக்கியில் கார் குண்டு வெடிப்பு என்று சந்தேகிக்கப்படும் ஒரு தாக்குதலில் பேருந்தில் இருந்த 13 படையினர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 48 பேர் காயமடைந்திருப்பதாகவும் அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters

உள்ளூர் சந்தை ஒன்றை சுற்றிப்பார்க்க அனுமதிக்கப்பட்டிருந்த படையினரை சுமந்து சென்ற பேருந்தை இந்த குண்டுவெடிப்பு கடுமையாக சேதப்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் பொதுமக்கள் சிலரும் காயம் அடைந்திருக்கலாம் என்று ராணுவ பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து கிடைத்த புகைப்படங்களில், உருக்குலைந்த பேருந்து ஒன்று புகைந்து கொண்டிருப்பதையும் அதன் ஒரு பகுதியில் மிகப்பெரிய ஓட்டை விழுந்திருப்பதையும் காண முடிகிறது.

படத்தின் காப்புரிமை Reuters

இஸ்தான்புல்லில் நடத்தப்பட்ட ஒரு குண்டுவெடிப்பு தாக்குதலில் 44 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு குர்தீஷ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றிருந்தனர். இந்த சம்பவம் நடைபெற்று ஒருவாரம் கழித்து இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.

குர்தீஷ் தீவிரவாதிகள் மற்றும் ஜிஹாதிகளால் இந்த ஆண்டில் பல அபாயகரமான தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களால் துருக்கி பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய தலைப்புகள்