ஆளில்லா நீர்முழ்கி விவகாரம்: அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை

அமெரிக்காவின் ஆளில்லா நீர்முழ்கி ஆய்வு வாகனத்தை சீனா கைப்பற்றிய விவகாரத்தில் கொந்தளிப்பான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், சீன கடல் எல்லை பகுதிக்கு அருகே அமெரிக்கா தனது கண்காணிப்பு நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சீனா தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை US NAVY
Image caption அந்த பகுதியில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த கப்பல்

பிலிப்பின்ஸ் கடற்கரைக்கு அப்பால் சீனா கடற்படை கப்பல் ஒன்று ஆளில்லா நீர்முழ்கி ஆய்வு வாகனத்தை கைப்பற்றியதை தொடர்ந்து பாதுகாப்புத்துறை அமைச்சகம் இந்த கருத்தை தெரிவித்துள்ளது.

சர்வதேச கடற்பகுதியிலிருந்து ஆளில்லா நீர்முழ்கி ஆய்வு வாகனத்தை எடுத்ததன் மூலம் சீனா முன்னெப்போதும் இல்லாத நடவடிக்கையை எடுத்திருப்பதாக அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை @realDonaldTrump

இந்த விவகாரத்தை மிகைப்படுத்துவது பொருத்தமற்றது என்றும் தீர்வை எட்டுவதற்கு அது உதவாது என்றும் சீனா தெரிவித்துள்ளது.