அலெப்போவில் கடுங்குளிரில் தவிக்கும் மக்களை வெளியேற்றும் பணி மீண்டும் தொடங்குமா?

கிழக்கு அலெப்போவில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான சிரியா மக்களை வெளியேற்றும் பணி அடுத்த சில மணி நேரங்களில் மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் காப்புரிமை Reuters

துருக்கி - சிரியா எல்லையில் இருக்கும், சிரியன் ரிலிஃப் என்ற தொண்டு நிறுவனத்தின் தலைவர் முனீர் ஹகிமி, புதிய ஒப்பந்தம் ஏற்படுவதில் சிக்கல் இருந்ததாகவும், உதவி குழுக்கள் பொது மக்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லவும் மேலும் மருத்துவ உதவிகளை வழங்கவும் தயாராக இருந்ததாகவும் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சிரியா நகரான அலெப்போவிலிருந்து வெளியேறுவதற்காக தவித்து கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் மேலும் ஒரு இரவை உறைய வைக்கும் குளிரிலும் ஆபத்தான நிலையிலும் கழித்தனர்.

மக்களை வெளியேற்றும் பணிகளை மேற்பார்வையிடுவதற்கு கண்கானிப்பாளரை கிழக்கு அலெப்போவிற்கு அனுப்புவது குறித்து தீர்மானிக்க ஐ.நா.,வின் பாதுகாப்பு கவுன்சில் இன்று வாக்களிக்கவுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்