ஆப்கன் துணை அதிபர் மீது கடத்தல் மற்றும் பாலியல் குற்றச்சாட்டு விசாரணை

ஆப்கானிஸ்தானின் துணை அதிபர், அவரது அரசியல் போட்டியாளர் ஒருவரை கடத்தி சென்று, பாலியியல் ரீதியாக துன்புறுத்தினார் என்ற குற்றச்சாட்டுக்களில் ஆப்கன் அதிகாரிகள் புலனாய்வை தொடங்கியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption காலில் காயம் இருப்பதை பத்திரிகையாளர்களிடம் காட்டும் அகமத் இஷிச்சி

முன்னாள் மேயர் அகமத் இஷிச்சியை கடத்திச் சென்று, ஐந்து நாட்கள் தன்னுடைய வளாகத்தில் பிணை கைதியாக வைத்திருந்ததாக அப்துல் ரஷித் தோஸ்டும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

அடைத்து வைத்திருந்தபோது, தன்னை சித்ரவதை செய்ததாகவும், பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகவும் இஷிச்சி குற்றஞ்சாட்டியுள்ளார்.

Image caption துணை அதிபர் அப்துல் ரஷித் தோஸ்டும்

இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுத்திருக்கும் ஜெனரல் தோஸ்டும், தன் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு பாரம்பரிய மத்தியஸ்தம் மூலம் தீர்வு காண விரும்புவதாக தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக, மனித உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டுக்கு உள்ளான பின்னரும், ஆப்கன் அரசில் குறிப்பிடும்படியான செல்வாக்கை இந்த ஜெனரல் கொண்டுள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்