ஜோர்டனில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சுற்றுலா பயணி உள்பட 4 போலிசார் பலி

ஜோர்டனில் தெற்கு நகரமான கேரக்கில் வாகனத்தல் வந்தவர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கேனடா நாட்டை சேர்ந்த ஒருவரும், நான்கு போலிசாரும் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை MIGUEL MEDINA
Image caption ஜோர்டனில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சுற்றுலா பயணி உள்பட 4 போலிசார் பலி

ரோந்து காவலர்கள் மற்றும் பாதுகாப்பு சோதனைச்சாவடிகளை அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் குறிவைத்தனர்.

நகரத்தில் உள்ள மிகப்பெரிய சிலுவைப்போர் அரண்மனைகளுக்காக அந்த பகுதி பிரபல சுற்றுலா தலமாக அறியப்படுகிறது.

இந்த துப்பாக்கிச்சூட்டில் மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர்.

மலைப்பாங்கான நகரில் உள்ள பழங்கால கோட்டையை சுற்றியுள்ள பகுதிகளில் தாக்குதல்தாரிகளை போலிசார் பின் தொடர்ந்து சென்றனர்.

பழங்கால கோட்டைக்குள் சிக்கிக்கொண்டுள்ள சில சுற்றுலா பயணிகளை துப்பாக்கித்தாரிகள் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த பகுதியை சிறப்பு அதிரடி படையினர் சுற்றி வளைத்துள்ளனர்.