அலெப்போ: மக்கள் வெளியேறுவதை கண்காணிக்க ஐநா கண்காணிப்பாளர்கள்

கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருக்கும் அலெப்போவின் கிழக்கிலுள்ள கடைசி பகுதியில், ஐநா கண்காணிப்பாளர்களை உடனடியாக நியமிக்கும் தீர்மானத்தை ஐநா பாதுகாப்பு அவை நிறைவேற்றியிருக்கிறது.

படத்தின் காப்புரிமை AFP

அரசின் படைப்பிரிவுகள் பெற்ற வெற்றியால் அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கும் அந்த பகுதியில் இருந்து கிளர்ச்சியார்கள் மற்றும் பொது மக்களை வெளியேறுவதை இவர்கள் கண்காணிப்பர்.

30 ஆயிரம் மக்கள் வரை இதனால் வெளியேறுவர் என்று நம்பப்படுகிறது.

அனாதை இல்லம் ஒன்றில் சிக்கியிருந்த ஏறக்குறைய 50 குழந்தைகளும் வெளியேறியோரில் அடங்கியிருப்பதாக மீட்புதவி பணியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

அதில் சிலர் சண்டையின்போது படுகாயம் அடைந்திருப்பதாக தோன்றுகிறது.