சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் அலட்சியமாக செயல்பட்டது கண்டுபிடிப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் தலைவரான கிரிஸ்டின் லகார்ட், எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் பிரஞ்சு நிதித்துறை அமைச்சராக இருந்த போது பெரிய இழப்பீட்டுத் தொகையை வழங்கியதில் அலட்சியமாக செயல்பட்டார் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கிரிஸ்டின் லகார்ட்

பாரிஸில் உள்ள சிறப்பு நீதிமன்றம் ஒன்றில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது.

அவரை தண்டிக்கவோ அல்லது குற்றச்சாட்டு பதியவோ வேண்டாம் என்று இந்த நீதிமன்ற முடிவெடுத்திருந்தது.

நிதியத்தின் பேச்சாளர் ஒருவர், இந்த விசாரணையின் முடிவு குறித்து விவாதிக்க நிதியத்தின் வாரியம் விரைவில் கூட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் என்று லகார்டின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.