ரொஹிஞ்சா முஸ்லிம் பிரச்சனையை தீர்க்க நேரம் மற்றும் இடைவெளி தேவை: ஆங் சாங் சூசி

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ரொஹிஞ்சா முஸ்லிம் பிரச்சனையை தீர்க்க நேரம் மற்றும் இடைவெளி தேவை: ஆங் சாங் சூசி

மியான்மாரின் சர்ச்சைக்குரிய ரக்கீன் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை தீர்க்க நேரம் மற்றும் இடைவெளி தேவை என்று மியான்மாரின் நடைமுறை தலைவராக இருக்கும் ஆங் சாங் சூசி கேட்டுக் கொண்டுள்ளார்.

ரக்கீன் மாநிலத்தில் உள்ள ரொஹிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிராக ராணுவம் பல அட்டூழியங்களில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆங் சாங் சூசி அரசாங்கத்தின் மீது ஓர் அழுத்தம் கொடுக்க அண்டை நாடுகளால் அழைப்பு விடுக்கப்பட்ட தென்கிழக்கு ஆசிய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்ற ஆங் சாங் சூசி இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

ரக்கீன் மாநிலத்தில் தேவையான மனிதாபிமான உதவிகள் செல்ல அனுமதிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், மிகவும் பதற்றமான பகுதிகளில், குறிப்பாக ரொஹிஞ்சா மக்களை ராணுவத்தினர் கொன்றும், பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியும் வருவதாக மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சாட்டும் பகுதிகள் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டே இருக்கும்

தொடர்புடைய தலைப்புகள்