ஆளும் அரசுக்கு எதிராக சூடானில் பொதுமக்கள் ஒரு நாள் ஒத்துழையாமை போராட்டம்

சூடானில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் சிக்கன நடவடிக்கைகளை எதிர்த்து பொதுமக்கள் இன்று ஒரு நாள் ஒத்துழையாமை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, பணிக்கோ அல்லது பள்ளிகளுக்கோ செல்லாமல் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தங்கியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்ய பொதுமக்கள் போராடிக் கொண்டிருக்கும்போது எரிபொருள் மானியத்தை ரத்து செய்ததால் அங்கு பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன.

இந்த போராட்டத்தை அதிபர் ஒமர் அல் பஷீர் கடுமையாக விமர்சித்துள்ளார்.. கணினி மூலம் அறிக்கைவிடும் செயற்பாட்டாளர்களால் தன்னுடைய அரசாங்கத்தை அகற்ற முடியாது என்று தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் இதே போன்று நடைபெற்ற ஒரு போராட்டத்தில் தற்போது கலந்து கொண்டதைவிட அதிகமானோர் கலந்து கொண்டிருந்தனர்.

அரசின் அழுத்தம் மற்றும் மருந்துகள் விலை அதிகரிப்பை திரும்பப் பெறும் அரசின் ஒரு முடிவு காரணமாக இந்த முறை போராட்டத்தில் பங்கேற்றோர் எண்ணிக்கை குறைவாக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

தொடர்புடைய தலைப்புகள்