ஜெர்மன் கிறிஸ்துமஸ் மார்க்கெட்டில் லாரி ஏற்றித் தாக்குதல்: 9 பேர் பலி

படத்தின் காப்புரிமை Reuters

ஜெர்மன் தலைநகர் பெர்லினில் கிறிஸ்துமஸ் மார்க்கெட்டுக்குள் லாரியை ஓட்டிச் சென்று நடத்தப்பட்ட தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என சந்தேகிப்பதாக போலீசார் கூறுகின்றனர். ஒளிப்பதிவுக் காட்சிகளைப் பார்க்கும்போது, அங்குள்ள பல கடைகள் இடித்துத் தள்ளப்பட்டு, பலர் காயமடைந்து தரையில் கிடப்பதைக் காண முடிகிறது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption மேற்கு பெர்லினின் மையப்பகுதியில் சம்பவம் நடந்துள்ளது

லாரியின் ஓட்டுநர் தப்பியோடிவிட்டதாக ஊடகடங்கள் கூறுகின்றன.

பிரெட்ஸிபிளெட்ஸ் பகுதியில், நகரின் மேற்கே பிரதான வர்த்தகப் பகுதியான குர்ஃப்ரெஸ்தென்டம் அருகே இந்த மார்க்கெட் உள்ளது.

சம்பவம் மிகக் குரூரமாக இருப்பதாக செய்தியாளர் ஒருவர் கூறியுள்ளார்.

அருகிலுள்ள விலங்கியல் பூங்காவின் நுழைவாயிலில் ஆயுதம் ஏந்திய காவலர்கள் இருந்ததாக செய்தி முகமை ஒன்றின் புகைப்படக்கலைஞர் தெரிவித்தார்.