மெக்சிகோ பட்டாசு சந்தை தீவிபத்தில் உயிரிழந்தோர் அதிகரிப்பு

மெக்சிகோ நகரின் புறநகர் பகுதியில் உள்ள ஒரு பட்டாசு சந்தையில் தொடர் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன.

படத்தின் காப்புரிமை MEXICAN RED CROSS / TWITTER
Image caption தீவிபத்து நடந்த இடம் .

இது குறித்து கருத்து தெரிவித்த அதிகாரிகள், இந்த குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டதாகவும், பல டஜன் மக்கள் இந்த விபத்தில் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில், தீப்பிடித்த பிறகு ஏரளாமான பட்டாசுகள் காற்றில் பறந்து செல்வதை சம்பவம் நடந்த பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட காணொளி காண்பித்துள்ளது.

விபத்து ஏற்பட்டுள்ள இடத்துக்கு பல டஜன் மருத்துவ குழுவினரும், போலீசாரும் வருகை புரிந்துள்ளனர். விபத்து நடந்ததற்கான காரணம் என்னவென்று இன்னமும் தெரியவில்லை.

விபத்து ஏற்பட்ட பகுதிக்கு பயணம் செய்ய வேண்டாம் என்றும், அங்கு செல்லும் சாலைகளை தவிர்த்து விடுமாறும் உள்ளூர் மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.