சிரியாவில் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் ஒரே நாளில் 14 படையினரை இழந்த துருக்கி

தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வட சிரியா நகரான அல்-பாப் அருகே ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் தங்களது படையை சேர்ந்த 14 பேர் ஒரே நாளில் கொல்லப்பட்டுள்ளதாக துருக்கி ராணுவம் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சிரியாவில் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் ஒரே நாளில் 14 படையினரை இழந்த துருக்கி

கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து சிரியாவில் துருக்கி நேரடியாக தலையிட்டு வரும் நிலையில், ஒரே நாளில் துருக்கிக்கு ஏற்பட்ட மிக அதிக இழப்பாக இது கருதப்படுகிறது.

சுமார் 130க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

துருக்கி எல்லையிலிருந்து 20 கி.மீட்டர் தொலைவில் உள்ள அல்-பாப் நகரமானது, மூன்று மாத காலமாக துருக்கி தாக்குதல் நடத்துவதற்கு முக்கிய இலக்காக இருந்து வருகிறது.

துருக்கி ஆதரவுப்பெற்ற சிரியா போராளிகளுடன் இணைந்து அங்கு ஜிஹாதிகளை எதிர்த்து துருக்கி சண்டையிட்டு வருகிறது.

தொடர்புடைய தலைப்புகள்