உணர்வுகளுக்கு உயிர்கொடுக்கும் இந்தோனீஷியா புகைப்படக் கலைஞர்

மொஹமத் ரோயம் இந்தோனீஷியாவை சேர்ந்த கத்துக்குட்டி புகைப்பட கலைஞர். இவர் எடுக்கும் புகைப்படங்களில், உயிரினங்களை மிக அருகில் பதிவு செய்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Muhammad Roem
Image caption இந்த வேடிக்கையான பல்லியின் புகைப்படம் தனக்கு மிகவும் பிடித்தமான படம் என்கிறார் மொஹமத் ரோயம்

நடனமாடும் தவளைகளில் ஆரம்பித்து வேடிக்கையான பல்லி வரை, 28 வயதுடைய ரோயமின் கேமராவில் எதுவும் தப்பவில்லை.

படத்தின் காப்புரிமை Muhammad Roem
Image caption ரோயமின் சில புகைப்படங்கள் உண்மையில் மிகவும் கவனிக்கத்தக்கவை

முழு நேர செவியலராக பணியாற்றும் ரோயம் மூன்றாண்டுகளுக்கு முன்பு, பொழுது போக்கிற்காக புகைப்படங்களை எடுக்கத் தொடங்கினார்.

தற்போது, பட்டமை சேர்ந்த இந்த கலைஞர், தனக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் காட்டுப் பகுதிகளில் உயிரினங்களை படம் பிடிக்க துரத்திக் கொண்டிருப்பார்.

படத்தின் காப்புரிமை Muhammad Roem
Image caption கண்கள் மூடினால் தருணத்தை தவறவிட்டுவிடுவீர்கள் - உடும்பின் கண்
படத்தின் காப்புரிமை Muhammad Roem
Image caption தவளைகளின் ரசிகன் மொஹமத் ரோயம்
படத்தின் காப்புரிமை Muhammad Roem
Image caption மொஹமத் ரோயம் 100mm மாக்ரோ லென்ஸை பயன்படுத்துகிறார். ஆனால், மிகவும் நெருக்கமான துல்லிய படங்களுக்கு MP E 65mm லென்ஸை தேர்வு செய்கிறார்.
படத்தின் காப்புரிமை Muhammad Roem
Image caption குளவியின் முகத்தில் தெரியும் துல்லியம்
படத்தின் காப்புரிமை Muhammad Roem
Image caption தும்பி மீது மழையை உங்களாலும் உணர முடியும்

''பூச்சிகளின் துல்லியமான உணர்ச்சி வெளிப்பாட்டை படம் பிடிக்க அதனை பின் தொடர்ந்து செல்வேன். சிலநேரங்களில் டஜன் கணக்கான புகைப்படங்களில் ஒன்று மட்டுமே நல்ல உணர்ச்சி வெளிப்பாட்டை கொண்டிருக்கும். மற்ற நாட்களில், எனக்கு எதுவும் கிடைக்காது'' என்று சொல்கிறார் பிபிசியிடம்.

''ஒரு விலங்கின் குறிப்பிட்ட பாகங்களை கூர்ந்து நோக்குவது பெரும்பாலோனருக்கு தெரிவதில்லை அல்லது அதில் ஆர்வம் காட்டுவதில்லை'' என்று கூறுகிறார் ரோயம். '' நான் விலங்கின் குறிப்பிட்ட ஒரு பகுதியை காட்ட முயற்சி செய்வேன். அதாவது உயிரினத்தின் கண்களை நீங்கள் பார்த்தால் அற்புதமாக இருக்கும்''.

பி பி சி தமிழில் வெளியான சிறந்த புகைப்படத் தொகுப்புகளை காண

கட்டடக்கலை 2016 (புகைப்படத் தொகுப்பு)

சென்னையை சின்னாபின்னமாக்கிய 'வர்தா' புயல் (புகைப்படத் தொகுப்பு)

புரட்டி போட்ட 'வர்தா' : இயல்பு வாழ்க்கையை இழந்த சென்னை (புகைப்படத் தொகுப்பு)

நியூ யார்க் சாந்தாகோன்: மதுவகங்களை தேடும் மகிழ்ச்சி கொண்டாடுவோர் (புகைப்படத் தொகுப்பு)

இந்தோனீஷியாவின் அச்சே மாகாணத்தை உலுக்கிய பூகம்பம் (புகைப்படத் தொகுப்பு)

ஜெயலலிதாவின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தும் பொதுமக்கள் (புகைப்படத் தொகுப்பு)

வெண்ணிற ஆடை முதல் நதியை தேடி வந்த கடல் வரை ஜெயலலிதா: புகைப்படத் தொகுப்பு

தடைகளை தகர்த்து சாதனை படைத்த மகளிர் (புகைப்படத் தொகுப்பு)

இந்த ஆண்டு வன உயிரின புகைப்பட கலைஞர் போட்டி – மக்களின் தேர்வு விருது (புகைப்படத் தொகுப்பு)

இந்தியாவின் சர்ச்சையை கிளப்பிய ஆடம்பர திருமணம் (புகைப்பட தொகுப்பு)