ஜெர்மனியில் தாக்குதலுக்குத் திட்டமிட்ட சகோதரர்கள் கைது

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஜெர்மனி முழுவதும் தீவிர பாதுகாப்பு

வர்த்தக மையத்தில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாக கொசோவோவைச் சேர்ந்த இரண்டு சகோதரர்களை சந்தேகத்தின்பேரில் ஜெர்மனி போலீசார் கைது செய்துள்ளனர்.

நெதர்லாந்து எல்லையை ஒட்டிய ஒபர்ஹசென் பகுதியில் உள்ள வர்த்தக மையத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திங்கள்கிழமை பெர்லினில் கிறிஸ்துமஸ் சந்தையில் நடந்த லாரி தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்ட பிறகு, ஜெர்மனி முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

லாரியை ஓட்டி வந்ததாக, சந்தேகத்தின்பேரில் தூனிஷிய நபரைக் கண்டுபிடிக்க ஐரோப்பா முழுவதும் தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.