ஐரோப்பாவை அடையும் முயற்சியில் பலியான குடியேறிகளின் எண்ணிக்கை ஐந்தாயிரத்தை தாண்டியது

ஐரோப்பாவை அடையும் முயற்சியில் மத்திய தரைக்கடலில் மூழ்கிய குடியேறிகளின் மொத்த எண்ணிக்கையானது இந்தாண்டு 5 ஆயிரத்தை தாண்டிவிட்டதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஐரோப்பாவை அடையும் முயற்சியில் பலியான குடியேறிகளின் எண்ணிக்கை ஐந்தாயிரத்தை தாண்டியது

இதுவரை பதிவான இறப்புக்களில் இதுதான் மிக அதிக எண்ணிக்கையாகும்.

கடந்த வியாழக்கிழமையன்று, இத்தாலி கடற்கரை பகுதிக்கு அப்பால் இரு கப்பல்கள் சேதமானதாக வெளியான தகவலை தொடர்ந்து இந்த எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்த கப்பல் விபத்தில் மட்டும் குறைந்தது 90 பேர் மூழ்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

குடியேறிகளுக்கு தஞ்சம் வழங்கும் நடைமுறைகளை எளிதாக்குமாறு ஐ.நா முகமை, நாடுகளை வலியுறுத்துள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்