நிதி நெருக்கடி ஏற்படுத்திய இரண்டு ஐரோப்பிய வங்கிகள் பணத்தை திருப்பி செலுத்த உறுதி

2007ம் ஆண்டு 'உலக அளவில் நிதி நெருக்கடி ஏற்படும் நிலைக்குத் தள்ளிய, ஐரோப்பாவின் இரண்டு பெரிய வங்கிகள், பல பில்லியன் டாலர் தொகையை அமெரிக்க அதிகாரிகளுக்கு செலுத்துகின்றன. இந்த இரண்டு வங்கிகளும், கடன்களின் அடிப்படையிலான பத்திரங்களை விற்றது தொடர்பான பிரச்சனைகளைத் தீர்க்கும் விதத்தில் தாங்கள் செலுத்த வேண்டிய தொகையை அளிக்க முன்வந்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

அபராதம் மற்றும் இழப்பீடாக, ஜெர்மனியின் பெரிய கடன் வங்கியான டாய்செ வங்கி 7.2 பில்லியன் டாலர்களை தர ஒப்புக்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை ஜெர்மனி அரசு வரவேற்றுள்ளது.

சுவிட்ஸர்லாந்தைச் சேர்ந்த கிரெடிட் சூசி என்ற நிறுவனம் ஐந்து பில்லியினுக்கும் மேலான தொகையை தான் செலுத்தப் போவதாக தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய வங்கிகளின் தவறான விற்பனையால் அமெரிக்காவின் வீட்டு விற்பனை சந்தை சரிந்ததற்காக அந்த வங்கிகளைப் பொறுப்பேற்க வைத்து, பணத்தை திரும்ப செலுத்த வைத்தது, அமெரிக்க நீதித்துறையின் உறுதியைக் காட்டுவதாக உள்ளது என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.