பெர்லின் தாக்குதல் எதிரொளி; ஜெர்மன் பாதுகாப்பு குறித்து சான்சிலர் ஏங்கெலா மெர்கல் கருத்து

பெர்லின் லாரி தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்பை மேம்படுத்தும் பொருட்டு அரசாங்கம் புதிய நடவடிக்கைகளை எடுக்கும் என்று ஜெர்மன் சான்சிலர் ஏங்கெலா மெர்கல் கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஜெர்மன் சான்சிலர் ஏங்கெலா மெர்கல்

இந்த தாக்குதல் குறித்த அனைத்து தகவல்களையும் மற்றும் அறிக்கையும் விரைவில் சமர்பிக்கப்படும்படி ஜெர்மன் அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்பு முகமை அதிகாரிகளை கேட்டிருப்பதாக மெர்கல் தெரிவித்துள்ளார்.

அனிஸ் அம்ரி இந்த தாக்குதல் திட்டத்துக்கு உதவினாரா மற்றும் தாக்குதலை செயல்படுத்தினாரா மற்றும் தாக்குதல் முடிந்தவுடன் தப்பித்து சென்றாரா என்பது குறித்த கேள்விகளை அது எழுப்பியுள்ளதாக மெர்கல் தெரிவித்துள்ளார்.

துனீசிய அதிபர் பெஜி கெய்ட் எஸ்செப்ஸியை தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு அம்ரியை போன்று தஞ்ச கோரிக்கை கேட்டு தோல்வியடைந்தவர்களை விரைவாக நாடு கடத்துவது பற்றி விவாதித்ததாக மெர்கல் கூறியுள்ளார்.