கிறிஸ்துமஸின் போது அமெரிக்காவில் தாக்குதல் நடத்த ஐ.எஸ் அழைப்பு விடுத்துள்ளதாக எஃப் பி ஐ எச்சரிக்கை

அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் போது தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்த ஐ.எஸ் குழுவினர் திட்டமிட்டுள்ளதாக எஃப் பி ஐ எனப்படும் புலனாய்வு அமைப்பு உள்ளூர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

அமெரிக்காவில் உள்ள தேவாலயங்கள் குறித்து இணையத்தில் தகவல் வெளியானதைத் தொடர்ந்து எஃப் பி ஐ இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக எஃப்.பி.ஐ தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை MANDEL NGAN
Image caption முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக எஃப்.பி.ஐ தெரிவித்துள்ளது.

குறிப்பிடத்தக்க தாக்குதல் அச்சுறுத்தல்கள் ஏதும் இல்லை என்றும் எஃப் பி ஐ கூறியுள்ளது.

சிரியா குறித்த செய்திக்கு :

சிரியாவின் அலெப்போ நகருக்கான போர் முடிவடைந்தது

தொடர்புடைய தலைப்புகள்