வங்கதேசத்தில் பதற்றத்தைத் தூண்டியதாக பத்திரிகையாளர் கைது

வங்கதேசத்தின் தலைநகர் டாக்கா அருகே மிகப்பெரிய ஆடை உற்பத்தி மண்டலங்களில் ஒன்றில் பதற்றத்தைத் தூண்டிய குற்றச்சாட்டின் கீழ் தொலைக்காட்சி பத்திரிகையாளர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption 2013ல் ராணா பிளாசா என்ற கட்டிடம் சரிந்ததில் 1,100க்கும் மேற்பட்டவர்கள் இறந்த சம்பவத்தை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

தவறாக செய்திகளை அளித்தது மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களுடன் ரகசிய கூட்டங்களை நடத்தியதாக நஜ்முல் ஹுடா என்ற பத்திரிகையாளர் மீது குற்றஞ் சுமத்தப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி நடத்திய போராட்டங்களினால், பல்வேறு மேற்கத்திய நாட்டு சில்லறை வணிகர்களுக்கு ஆடைகள் தயாரிக்கும் ஆலைகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது.

2013ல் ராணா பிளாசா என்ற கட்டடம் சரிந்ததில் 1,100க்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த கட்டடம் தரமற்ற கட்டமைப்புடன் உள்ளது என்ற செய்தியை பத்திரிகையாளர் ஹூடா தான் முதன்முதலாக வெளியிட்டார். அவரது செய்தி வெளியான அடுத்த நாள் அந்த கட்டடம் சரிந்தது குறிப்பிடத்தக்கது.

வங்கதேசத்தின் மிகப்பெரிய ஆடை உற்பத்தி மண்டலங்களில் ஒன்றான மற்றும் தலைநகர் பகுதியான டாக்கவில் பதற்றத்தைத் தூண்டிய குற்றச்சாட்டின் கீழ் ஒரு தொலைக்காட்சி பத்திரிகையாளரைக் கைது செய்துள்ளனர்.