போலீசில் சரணடைய மறுத்து, மனித வெடிகுண்டாக வெடித்து சிதறிய பெண்

வங்கதேசத்தில் போலீசாரிடம் சரணடைய மறுத்து, ஒரு பெண் தன்னைத் தானே வெடிக்கச் செய்து இறந்த முதல் சம்பவம் நடந்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption போராளிகளின் மறைவிடம் என்று வங்கதேச அரசால் கருதப்பட்ட இடத்தில் சோதனை நடத்தப்பட்டது.

அந்தப் பெண்ணோடு இருந்த ஒரு இளம் பெண் காயமடைந்துள்ளார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர்களோடு இருந்த ஓர் ஆண் துப்பாக்கி சூட்டில் இறந்தார். மற்றும் இரண்டு பெண்கள் இரண்டு குழந்தைகளுடன் சரணடைந்தனர்.

தீவிரவாதிகளின் மறைவிடம் என்று அரசால் கருதப்பட்ட இடத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

கடந்த ஜூலை மாதம் ஓர் உணவகத்தை மோசமாக முற்றுகையிட்டு ஆட்களைப் பிடித்துவைத்திருந்த சம்பவத்தை நிகழ்த்திய இஸ்லாமியவாதக் குழு ஒன்று பயன்படுத்திய இடம்தான் தற்போது சோதனைக்கு உள்ளான இடம் என உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.