அல்-பாப் நகரில் ஐ.எஸ் தீவிரவாதிகள் - துருக்கி ராணுவம் இடையே கடும் மோதல்

வட சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளுடனான மோதலில் சுமார் 70 தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது காயமடைந்திருக்கலாம் என்று துருக்கி ராணுவம் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அல்-பாப் நகரில் ஐ.எஸ் தீவிரவாதிகள் - துருக்கி ராணுவம் இடையே கடும் மோதல்

அல்-பாப் நகரை சுற்றி ஒரே இரவில் 140க்கும் மேற்பட்ட ஐ.எஸ் நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

தீவிரவாதிகளிடமிருந்து அல்-பாப் நகரை மீட்க துருக்கி ராணுவம் மற்றும் அதன் உள்ளூர் போராளி குழுக்கள் முயற்சித்து வருகின்றன. மேலும், சமீப நாட்களில் அந்தப் பகுதிகளில் மோதலானது மிகவும் தீவிரமடைந்துள்ளது.

சம்பவ இடத்திலிருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை. அதனால், சமீபத்திய மோதல் தொடர்பாக ராணுவம் தெரிவித்துள்ள தகவல்களை உறுதிப்படுத்தவ முடியவில்லை.

தொடர்புடைய தலைப்புகள்