இந்தோனீஷியாவில் இஸ்லாமியவாத தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்பட்ட இருவர் சுட்டுக்கொலை

இந்தோனீஷியாவில் மேற்கு ஜாவா மாகாணத்தில் இஸ்லாமியவாத தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்பட்ட இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு போலிசார் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

கிறிஸ்துமஸ் விடுமுறை காலகட்டத்தில் தாக்குதல் நடைபெறுவதை தடுக்கும் நோக்கில் நடத்தப்பட்ட தொடர் சோதனைகளில் இது சமீபத்திய சோதனையாகும்.

புர்வகர்டா நகரில் நடத்தப்பட்ட சோதனையின் போது துப்பாக்கிச் சண்டையில் இந்த நபர்கள் கொல்லப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தலைநகர் ஜகார்த்தாவின் புறநகர் பகுதியில் தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்பட்ட மூன்று பேரை சுட்டுக் கொன்றதால கடந்தவாரம் போலிசார் தெரிவித்திருந்தனர்.

கடந்த சில வாரங்களில் மட்டும் பல்வேறு குண்டுவெடிப்பு திட்டங்களை இந்தோனீஷியா போலிசார் முறியடித்துள்ளனர். ஐ.எஸ் குழுக்களுடன் தொடர்பில் உள்ள தீவிரவாதிகள் தாக்குதலை தொடுக்கும் முயற்சிகள் முன்பை காட்டிலும் துணிச்சலாக இருந்து வருவதாக கவலைகள் எழுந்துள்ளன.