நோபல் பரிசு வென்றவரை சிறையில் வைத்திருப்பதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

மனித உரிமைகள் ஆர்வலரும் மற்றும் நோபல் பரிசு பெற்றவருமான லி ஷியாபோவை தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக தடுப்புக்காவலில் வைத்துள்ள சீனாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டஜன் கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஹாங்காங்கில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சீன அரசாங்கத்தின் தொடர்பு அலுவலகம் எதிரே, இந்தப் போராட்டம் நடைபெறுகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption லியோ சிறைக்குத் தள்ளப்பட்டு ஏழ ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

சீனாவில் அரசியல் மாற்றம் வேண்டி போராடிய லியோ சிறைக்குத் தள்ளப்பட்டு ஏழாவது ஆண்டு நிறைவை குறிக்கும் விதமாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

2010 ஆம் ஆண்டில் லியோவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதை தொடர்ந்து நார்வே உடனான ராஜிய உறவுகளை துண்டித்தது சீனா.

எனினும், சமீபத்தில் இருநாடுகளுக்கு இடையே மீண்டும் உறவுகள் புதுப்பிக்கப்பட்டன.

தொடர்புடைய தலைப்புகள்