ரஷ்யா விமான விபத்து : முதற்கட்டமாக 10 பயணிகளின் உடல் கண்டெடுக்கப்பட்டது

கடந்த ஞாயிறன்று, கருங்கடலில் விழுந்து நொறுங்கிய விமானத்திலிருந்து பதினோரு சடலங்களை மீட்டுள்ளதாகவும், அவை மாஸ்கோவுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ரஷ்யா விமான விபத்து : முதற்கட்டமாக 10 பயணிகளில் உடல் கண்டெடுக்கப்பட்டது

சோச்சியிலிருந்து விமானம் கிளம்பிய சில நிமிடங்களில் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.

அதில் பயணித்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் என 92 பேரும் பலியாகி உள்ளனர்.

உயிரிழந்தவர்களில் ரஷ்ய ராணுவத்தால் போற்றப்படும் அலெக்ஸாண்ட்ரோவ் என்செம்பிள் என்ற இசைக்குழுவினரின் உறுப்பினர்களும் அடங்குவார்கள்.

விமானி செய்த தவறு அல்லது தொழில்நுட்ப கோளாறு ஒன்றுதான் விபத்து நிகழ்வதற்கு காரணமாக இருந்திருக்கலாம் என்று ரஷ்ய போக்குவரத்துறை அமைச்சர் மேக்ஸிம் சோகோலோவ் தெரிவித்துள்ளார்.

3,000 மீட்புதவி பணியாளர்கள் ஈடுபட்டுள்ள ஒரு மிகப்பெரிய தேடுதல் நடவடிக்கை இன்னும் தொடர்ந்து நடந்து வருகிறது,

தொடர்புடைய தலைப்புகள்