தாய்லாந்தில் இணைய கட்டுப்பாட்டை எதிர்த்து அரசு வலைத்தளங்களில் ஊடுருவியோர் கைது

தாய்லாந்தில் இணையதள பயன்பாட்டை கட்டுப்படுத்தும் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு கணினிகள் மற்றும் வலைத்தளங்களில் சட்ட விரோதமாக ஊடுருவிய 9 பேரை தாய்லாந்து போலிஸார் கைது செய்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

முன்னதாக இந்த மாதத்தின் தொடக்கத்தில் சைபர் குற்ற தடுப்புச் சட்டத்திருத்திற்கு தாய்லாந்து நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.

ஆனால் அந்த சட்டம் அதிகளவில் அரசு இணைய பயன்பாட்டை கண்கானிக்க வழிவகுக்கும் என பிரச்சாரகர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் அந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டவிரோதமாக கணினிகளில் ஊடுருவிய குழுவின் தொடர் தாக்குதலில் டஜன் கணக்கான அரசு வலைத்தளங்கள் முடக்கப்பட்டன.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் மீது சைபர் குற்ற தடுப்பு சட்டத்தை மீறியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது

தொடர்புடைய தலைப்புகள்