ஊக்க மருந்து சர்ச்சை கருத்துக்கு ரஷியா மறுப்பு

விளையாட்டுத் துறையில் ஊக்க மருந்து உட்கொள்வது குறித்து ரஷியாவின் ஊக்க மருந்து தடுப்பு முகமை பொறுப்பு பொது இயக்குநரின் கருத்து தவறாகவும் திரித்தும் புரிந்து கொள்ளப்பட்டது என ரஷிய ஊக்க மருந்து தடுப்பு முகமை தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption உலக ஊக்க மருந்து தடுப்பு முகமையால் நியமிக்கப்பட்ட விசாரணையாளர் ரிச்சர்ட் மெக்லரின்

நியூ யார்க் டைம்ஸிற்கு ஹானா ஆன்செலிஒவிட்ச் அளித்த நேர்காணலில், ரஷியாவின் ஊக்கமருந்து உட்கொள்ளுதல் சம்பவத்தில் நூற்றுக்கணக்கான ரஷிய தடகள வீர்ர்கள் பங்கேற்றதாக ஒப்புக் கொண்டார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதை ஒரு நிறுவன சதி எனவும் அவர் விவரித்துள்ளார்.

ஊக்கமருந்து நடவடிக்கைகளில் எவ்வித பங்கேற்புகளும் இல்லை என ரஷியா அனைத்து காலங்களிலும் மறுத்து வந்துள்ளது.

முன்னதாக இந்த மாதத்தின் தொடக்கத்தில், உலக ஊக்க மருந்து தடுப்பு முகமையால் நியமிக்கப்பட்ட விசாரணையாளர் ரிச்சர்ட் மெக்லரின், ரஷிய தடகள வீரர்கள் ஊக்க மருந்து உட்கொண்டனர் என்பதற்கான விரிவான ஆதாரங்களை வெளியிட்டார்.

அவரின் முதல்நிலை அறிக்கை பல ரஷிய தடகள வீரர்கள் இந்த வருடம் கோடை காலத்தில் நடைபெற்ற ரி்யோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கிடுவதை தடுத்தது.

தொடர்புடைய தலைப்புகள்