கிறிஸ்துமஸ் சந்தை தாக்குதல்: துனீசிய நபர் மீது கைது ஆணை பிறப்பிக்கப்படுமா?

கிறிஸ்துமஸ் சந்தையில் மக்கள் கூட்டத்திற்குள் தீடிரென லாரியை செலுத்திய நபருடன் தொடர்பு உள்ளதாகக் கருதப்படும் ஒரு துனீசிய நாட்டு நபருக்கு எதிராகஅதிகாரப்பூர்வாமாக கைது ஆணை பிறப்பி்ப்பது குறித்து இன்று ஜெர்மனி போலீசார் முடிவு எடுப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

புதன்கிழமை முதல் அந்த 40 வயது துனீசிய நபர் தற்காலிக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நபரின் தொலைபேசி எண், தாக்குதல் நடத்திய நபரான அனீஸ் அம்ரியின் செல்பேசியில் இருந்ததாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் ஜெர்மனியில் உள்ள ஊடகங்களில், அனீஸ் அம்ரி தாக்குதல் நடத்திய போது, அந்த லாரியில் இருந்த தானியங்கி நிறுத்த பிரேக்) அமைப்பு செயல்பட்டதால், அவரால் மேலும் பலர் கொல்லப்படுவது தடுக்கப்பட்டது என்று செய்தி வெளியிட்டுள்ளன.

கிறிஸ்துமஸ் சந்தையில் செலுத்தப்பட்ட லாரி முதலில் அங்குள்ள கடைகளை தாக்கியதில் 11 நபர்கள் இறந்தனர். அப்போது லாரியில் இருந்த தானியங்கி நிறுத்த அமைப்பு செயல்பட தொடங்கியதால் லாரி உடனடியாக நின்றுவிட்டது.