சீன அரசின் முன்னாள் உளவுத்துறை தலைவர் மீது ஊழல் வழக்கு

சீன அரசு, தனது உளவுத்துறையின் முன்னாள் தலைமை அதிகாரி ஒருவர் மீது ஊழல் குற்றம் சுமத்தியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

மா ஜியான் என்ற முன்னாள் உள்நாட்டுப் பாதுகாப்பு துறையின் துணை அமைச்சர் லஞ்சம் பெற்றதாகவும், தனது உறவினர்களின் வணிகத்திற்கு உதவியதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் விசாரணை தொடங்கியவுடன், அவர் தனது நடவடிக்கைகளுக்கான ஆதாரங்களை மறைக்க முயற்சி செய்தார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மா ஜியான் வழக்கை எதிர்கொண்டு, சிறைக்கு செல்லவேண்டியிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, சீன அதிபர் ஷி ஜின்பிங் தொடங்கி வைத்த ஊழலுக்கு எதிரான பிரசாரத்தின் சமீபத்திய இலக்காக மா ஜியான் கருதப்படுகிறார்.