தியானன்மென் சதுக்க படுகொலை முன்பே திட்டமிடப்பட்டதற்கான ஆதாரம்

மறைந்த சீன தலைவர் டெங் ஷியோ பிங், 1989 ஆம் ஆண்டு தியானன்மென் சதுக்கத்தில் படுகொலை நிகழ்த்தப்படுவதற்குமுன், 200 பேர் உயிரிழந்தால் சீனாவில் இருபது ஆண்டுகளுக்கு அமைதி நீடிக்கும் என்று கருத்து தெரிவித்தாக தகவல் வெளியாகியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தியானன்மென் சதுக்க படுகொலை

இந்தக் கருத்தை அப்போது பெய்ஜிங்கிலிருந்த பிரிட்டிஷ் தூதவரிடம் டெங் ஷியோ பிங் கூறியிருக்கிறார். அவர் அதனை ஒரு தந்தி மூலம் லண்டனுக்கு தெரிவித்துள்ளார். தற்போது, அந்த தந்தி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தந்தியின் மூலம், படையினர் உள்ளே அனுப்பப்படுவதற்கு குறைந்தது இரு வாரங்களுக்குமுன் சீனத்தலைவர்கள் ஒரு இரத்தக் களரி நடவடிக்கைக்கு திட்டமிட்டிருந்ததை வலியுறுத்துகிறது.

பெய்ஜிங் சதுக்கத்தில் கூடியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய தலைப்புகள்